JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விசார் திட்டத்தின் கீழ் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஊடாக பெண்களின் சமூக மற்றும் வாழ்வாதார மேம்படுத்தலை நோக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் ஊடாக பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (22) செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கற்பிட்டி பயிற்சி நிலையத்தில் அதன் நிறைவேற்ற பணியாற்றினார் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வின் தெளிவூட்டல்களை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகப் பணியியல் இறுதியாண்டு மாணவி மொஹமட் பசீர் பாத்திமா ரிப்லா வழங்கினார் மற்றும் திரீ எம் செடோ நெனசல முகாமையாளர் ஏ.ஆர்.எம் ஹாபீஸ் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال