JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட சாதனை வீரர்கள் கௌரவிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் விளையாட்டு மைதான வசதிகள் அற்ற நிலையிலும் ஓட்ட போட்டிகள் மற்றும் தட்டெறிதல் போட்டிகள் என்பவற்றில் கோட்ட மட்டம் மற்றும் வலய மட்ட போட்டிகள் என்பவற்றில் சாதனைகள் நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ் தெரிவித்தார்.


இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பாடசாலையின் காலைக் கூட்டத்தில் இடம்பெற்றது. இதில் 12 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 50 மீட்டர் அஞ்சல் ஓட்ட போட்டியில் கற்பிட்டி கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் வலய மட்டத்தின் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு அதில் ஐந்தாம் இடத்தை பெற்ற எம் எஸ் எம் அப்ரத், எம்.ஏ அதிப், எப் எம் பஜிர், எஸ் எம் றிஜாப் அகிய அஞ்சல் ஓட்ட அணி வீரர்கள் மற்றும் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் தட்டெறிதல் போட்டியில் கோட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் ஆர்.எம் றிஷாத் ஆகியவர்களே இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் இம் மாணவர்கள் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஆசிரியர்களான எம். எஸ் சாஹிர், எம் .ஜே.எம் ஜெஸ்லின்  ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாகவும் பாடசாலை நிர்வாக் குழு சார்பாகவும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் உட்பட நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال