JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச அபிவிருத்திக்கான மாதாந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்சினி ஏற்பாட்டில் குழுத்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஜே.எம் பைசல் தலைமையில் புதன்கிழமை (25) கற்பிட்டி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், மீன்பிடி, உல்லாசப் பயணத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும், கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் என்பதன கலந்துரையாடப்பட்டது.


மேற்படி ஒருங்கிணைப்பு அவையில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எஸ்.எம் றிகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் நிமல் பத்திர கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال