JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் வாழ்த்துச்செய்தி..!

(எஸ். சினீஸ் கான்)

2025 ஆம் ஆண்டு ஈத் அல்-அழ்ஹா பெருநாளை முன்னிட்டு, இரண்டு புனித பள்ளிவாயில்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ்  மற்றும் சவூதி மக்கள், அங்கு வசிக்கும் பிற நாட்டவர்கள் மற்றும் முழு இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இப்புனிதமிகு நன்னாளில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த  நல்வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை குடியரசு, அதன் தலைமை மற்றும் மக்களுக்கு எனது நட்புறவையும் நன்றியையும் வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் காணப்படும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது நமது இரு நட்பு நாடுகளின் நலன்களை பேணவும் , அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கிறேன்.

 

நமது இரு நட்பு நாடுகள் மற்றும் மக்களுக்கும் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிலைநிறுத்தவும், இந்த அருள்நிறைந்த  சந்தர்ப்பத்தை நன்மை மற்றும் அமைதியுடன் மீண்டும் மீண்டும் எமக்களிக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

 

ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 

-இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

காலித் ஹமூத் அல்கஹ்தானி







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال