JobVibe.lk - Sri Lanka Job Portal

எம். ஜீ. ஆர். மன்றத் தலைவர் கே. செல்வராஜ் மறைவுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் அனுதாபம்..!

எம். ஜீ. ஆர். மன்றத் தலைவர் கே. செல்வராஜ் அவரத மரணச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்ததுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்துள்ளார்.


அவரது இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.


மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


இவர் புத்தளம் எம்ஜிஆர் மன்றத்தின் தலைவராகவும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்பகால செயற்பாட்டளராக 1977ல் மறைந்த பிரதி நிதியமைச்சர் நெய்னாமரைக்கார், மறைந்த பிரதி அமைச்சர் கே.ஏ பாயிஸ், மறைந்த மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம் இல்யாஸ் ஆகியோருடன் அரசியல் செயல்பாட்டாளராகவும், முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர சபையின் வேட்பாளராகவும் இருந்தவர்.


இந்து ஆலயங்களின் பரிபாலன தர்மகர்த்தாவாக  சமூக செயல்பாட்டாளராக தமிழ் முஸ்லிம் சமூகங்களின் உறவுப்பாலமாக திகழ்ந்த மனிதரை புத்தளம் மண் இழந்துவிட்டது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.


 அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்..!




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال