JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை ரீதியில் ஜம்இய்யதுல் குர்ராஃ ஏற்பாட்டில் இடம்பெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் மொஹமட் மஹ்றூப் மொஹமட் அக்ஸான் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.


நூற்றுக்கு மேற்பட்ட மத்ரஸாக்களிலிருந்து சுமார் 500 மாணவர்களுக்கிடையில் மிக விருவிருப்பாக நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியின் நடுவர்களாக சர்வதேச நடுவர் சங்கத்திலிருந்து வருகை தந்த கட்டார் மற்றும் சவுதி அரேபியா நாடுகளிலிருந்து வருகை தந்த நடுவர்கள் என்பதும் சாதனையாளர் கௌரவிப்பு கொழும்பு பிஸப் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال