JobVibe.lk - Sri Lanka Job Portal

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நிசாம் காரியப்பரின் கவிதை நூல் வெளியீடு.!

(அஸ்லம் எஸ். மெளலானா)

எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி திருச்சி எம்.ஐ.ஈ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாட்டில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் எழுதிய "அந்த கல்முனைகுடி நாட்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்படவுள்ளது.


இந்த மாநாட்டின் முதல்நாள் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதம விருந்தினராக பங்கேற்று, இந்த கவிதை நூலை வெளியிடவுள்ளார்.


இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன்,  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட மற்றும் சில அரசியல் பிரமுகர்களும் மூத்த கலை, இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال