Breaking News

கற்பிட்டி கண்டக்குளி வட்டாரத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரக் காரியாலயம் திறந்து வைப்பு!.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபையின் கண்டக்குழி வட்டாரத்திற்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார காரியாலயம் பள்ளிவாசல்துறையில் வேட்பாளர் முயிஸ்தீன் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம்.நியாஸ்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உருப்பினர் ஏ.எச்.எம் .பைரூஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான எம் எச் எம் ஹில்மி மற்றும் கற்பிட்டி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான மௌலவி றிப்கான்(றஹ்மானி), முயீஸ்தீன் ஆகியோருடன் நூற்றுக்கணக்கான கட்சியின் போராளிகளும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






No comments