JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பை வௌியிட்ட IMF!

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். 


இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (04) காலை பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும், கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال