JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கென்சிங்டன் எகடமி தனியார் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்டமும் சாதாரணதர மாணவர்கள் கௌரவிப்பும்

கற்பிட்டி கென்சிங்டன் எகடமி தனியார் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை (05) சிறுவர் தின நிகழ்வும் இம்முறை சாதாரண தர பரீட்சையில் எகடமியில் மாலை நேர வகுப்புக்களில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வைபவமும் எகடமியின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம் ஹிஸ்மி தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் சகல பாடங்களிலும் 9 A சித்திகள் பெற்ற எம்.ஆர்.எப் இமானி,எம்.எம்.எம்  முஸ்லீஹ், எப் எப் நிஹ்லா மற்றும் எம்.ஏ.எப் சாரா ஆகிய மாணவர்களுடன் 2 A க்கு மேல் பெற்ற மேலும் சுமார் 30 மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ.எம் சனூன்)












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال