JobVibe.lk - Sri Lanka Job Portal

அஹதியா இடைநிலை பரீட்சையில் ஹிதாயத் நகர் அஹதியா பாடசாலை சிறந்த பெறுபேறு

2024 அஹதியா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட அஹதியா இடைநிலை சான்றிதழ் பரீட்சையில் ஹிதாயத் நகர் அல் இஸ்ஸோ அஹதியா பாடசாலை மாணவர்கள் 100% சித்தியடைந்துள்ளதுடன் 9 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளதாக அஹதியா பாடசாலையின் அதிபர் எச்.எம்.எப் ஹிமாயா தெரிவித்தார்.


அதனடிப்படையில் எம்.எச்.எம். ஹாதி, எம்.எம். முஸ்கித், எம்.எஸ். முஸ்னி அஹமட், எம்.ஏ.எப். நுஸ்கா, எம்.என்.எப்.நபா, எம்.எஸ்.எப். அம்னா, எம். சஜா, எஸ்.எப். ராயா ஆகியோர் 3ஏ சித்தியை பெற்றுள்ளதுடன் ஜே.எப். சேஹா எனும் மாணவி ஆங்கில மொழி மூலம் தோற்றி 03 பாடங்களிலும் சித்தியை பெற்றுள்ளார்.


சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உழைத்த அஹதியா பாடசாலையின் தலைவருக்கும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்திய பாட ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال