JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கி வைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன் )

விளையாட்டுத் துறை  அபிவிருத்தி திணைக்களத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பான உதவி விளையாட்டுத்துறை  பணிப்பாளர்  டபள்யூ.டி.ஜீ.கே காமினி  கொஸ்தா வியாழக்கிழமை (10) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் 


இதன்போது கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீரிடம் உதவி விளையாட்டுத்துறை பணிப்பாளரினால் பாடசாலையின் விளைட்டுத்துறையினை  மேம்படுத்தும் முகமாக விளையாட்டு பொருட்கள் சில கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் மற்றும் விளையாட்டு பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post

نموذج الاتصال