JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியைச் சேர்ந்த வைத்தியத்துறை மாணவன் எம்.என்.எம் நப்ரிஸ் இறுதிப் பரீட்சையில் 94 வது இடத்தை பெற்று வைத்தியரானார்

வெளியாகிய இறுதி வைத்தியத் துறைக்கான (MBBS Merit List) இல்  களனிப் பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறை மாணவனான  கற்பிட்டியை சேர்ந்த மொஹமட் நமாஸ் மொஹமட் நப்ரிஸ்  அகில இலங்கை ரீதியில் 94 வது இடத்தை  பெற்று வைத்தியராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் புத்தளம் விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றின் பழைய மணவர் அத்தோடு காலஞ்சென்ற மர்ஹும் எம்.நமாஸ் கணித ஆசிரியர் மற்றும் தற்போது கற்பிட்டி அல் மனார் ஐயூப் பாடசாலையின் ஆசிரியர் எம்.பீ.சுலைஹா ஆகியோரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம்.எச்.ஏம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)








Previous Post Next Post

نموذج الاتصال