JobVibe.lk - Sri Lanka Job Portal

பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம் தமிழ் தின போட்டியில் வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வில்லுப்பாட்டு குழுவினர் இம்முறை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தின போட்டியில் முதலாம் இடத்தை பெற்று பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த வியாழக்கிழமை (10) குருணாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியிலேயே பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட  தமிழ் தின வில்லுப்பாட்டு போட்டிகள் இடம்பெற்றது 


பூலாச்சேனை பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி பாடசாலையை உச்சம் தொட உறுதுணையாக இருந்த எமது பாடசாலை அதிபரிற்கும் இதற்காக  பெரிதும் உழைத்த ஆசிரியர்களுக்கும், தமது திறமையை நாடறிய வைக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு அல்லும் பகலும் அயராது உழைத்த மாணவர்களுக்கும் ,அவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும்  பூலாச்சேனை பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றார்கள்




Previous Post Next Post

نموذج الاتصال