JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)

திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 10.10. 2024  அன்று தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.  இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார். 


இதற்கு  எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும் கற்பிட்டி பொலிஸ்  நிலையத்தில் முறையிட்ட போதும் ஊர் மக்களாலும் பொலிசாரினாலும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை. 


ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்து சுதந்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும், பாடசாலை உள்விகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களின் அராஜகங்களை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று ( 16) முதல்  திகழி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال