JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் வேட்பாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.


இந் நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களு கலந்து கொண்டனர்.


இதன் போது எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளின் போது கட்சி கட்டமைப்பிற்கு எதுவித பாதிப்புக்களுமின்றி இன மத, பிரதேச பேதங்கள் எதுவுமின்றி மார்க்க விழுமியங்களையும் கடைபிடித்து தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال