JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய மட்ட சீனடிக்கலை போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய கலாச்சார போட்டியின் சீனடிக்கலை நிகழ்வில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதித்துள்ளர்.


கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் சனிக்கிழமை (07) நடைபெற்ற தேசிய ரீதியிலான இப்போட்டியில் ஊவா மாகானத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய பதுளை மாவட்ட பாடசாலை முதலிடம் பெற்றது .


இரண்டாம் இடத்தினை  வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டது.


கடந்த மாதம் குருநாகலில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா முதலிடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தேரிவு செய்யப்பட்டிருந்தது.


இந்த அணியினை ஸாஹிரா பாடசாலையின் ஆசிரியர் முஹம்மது சுபியான் பயிற்றுவித்திருந்தார்.


அதிபர் ஐ.ஏ.நஜீமின் வழி நடாத்தலில் உதவி அதிபர் பரீத் பாத்திமாவின் ஊக்கப்படுத்தலில் இவ்வணி தயார் படுத்தப்பட்டது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال