JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சாய்ந்தமருது காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் சாய்ந்தமருது காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும் நாளை (08) ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற ஏற்பாடு செய்துள்ளது. 


இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.


கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வர்.


இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال