JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதியின் புதிய இணை அமைப்பாளராக நியமனம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

ஐக்கிய மக்கள் சக்தி புத்தளம் தேர்தல் தொகுதியின் புதிய இணை அமைப்பாளராக முன்னாள் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி  தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவினால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் (09) வைத்து சஜித் பிரேமதாச இவருக்கான நியமன கடிதத்தை கையளித்தார். 


இதுவரை காலமும் புத்தளம் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களே செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிறுபான்மை இன ஒருவராக புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புத்தளம் வாழ் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.


முன்னாள் நகர பிதா ரபீக், சிறந்ததொரு கால்பந்தாட்ட வீரரும், கால்பந்தாட்ட நடுவரும், கடின பந்து கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமாக திகழ்வதோடு புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தற்போதைய தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال