JobVibe.lk - Sri Lanka Job Portal

அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்எம்.சியாஜ்

புத்தளம் மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாக சபை உறுப்பினரான சமூகவியலாளர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி புத்தளம் ஸாஹிறா ஆரம்ப பாடசாலை அதிபராக நியமனம் பெற்று கடமையாற்றி வருவதைப் பாராட்டி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிர்வாக சபையினரால் பொன்னாடைப் போர்த்தி கெளரவிக்கப்பட்டார். 


இந்நிகழ்வு அண்மையில் மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க், அல் ஹாபிழ் ஏ.எம்.எம்.ரியாஸ் (தேவ்பந்தி) தலைமையில் கல்லூரியில் இடம்பெற்றது.


அதே வேளை கல்லூரியின் உப தலைவராக நீண்ட காலமாக செயற்பட்ட  மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ. தாஹிரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி உப தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال