JobVibe.lk - Sri Lanka Job Portal

களிகம்பு கலை நிகழ்வை நடாத்திய மாணவிகளுக்கு சானாறிதழ் வழங்கல்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார விழுமியங்களை மேன்மைபடுத்தும் முகமாக அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.


அந்நிகழ்வில் ஸைனப் ஆரம்ப பாடசாலையின் மாணவிகளால் களிகம்பு அடித்து இஸ்லாமிய கீதம் அரங்கேறியது.


அந்த மாணவிகளுக்கான சான்றிதழ்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் ஸல்மான் (இஹ்ஸானி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப செயளாலர் அஷ்ஷேக் இமாம்தீன்(அஷ்ரபீ) ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال