JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காரியாலயம் ஐக்கிய மக்கள் சக்தியினரால் திறப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்  யூ.எம் சனூன்) 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பு வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக தேர்தல் பிரச்சார காரியாலயம் திங்கட்கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது.


கற்பிட்டி நகர ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபையின் வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற இக்காரியாலய திறப்பு விழாவில் அதிதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி,  முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம் நியாஸ் , புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் நகரங்களுக்கான இணை அமைப்பாளர் எம்.எஸ்.எம் றபீக், முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான எம்.எச்.எம் ஹில்மி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் துசார, கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான காமினி ரொட்ரிகோ, நலின் திசேரா, மஞ்சுளா, அஸ்லம், ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச மகளீர் சம்மேளத்தின் செயலாளர் கலைச்செல்வி மற்றும் கற்பிட்டி பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் கடற்றொழில் சங்கத் தலைவர் வசந்தன் ஆகியோருடன் கட்சியின் தொண்டர்கள், போராளிகள் அபிமானிகள் என சகலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال