JobVibe.lk - Sri Lanka Job Portal

சாதனை நடை பயணம் மேற்கொள்ளும் பேருவளை சஹ்மி ஸஹீடுக்கு மகத்தான வரவேற்பு வழங்கி வழியனுப்பிய புத்தளம் மக்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

சுமார் 1520 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு இலங்கையை சுற்றி வளம் வரும் பேருவளை யைப் சேர்ந்த சாதனை வீரன் சஹ்மி ஸஹீட்  தனது நடை பயணத்தின் 39 நாளான செவ்வாய்க்கிழமை (20) புத்தளத்தை வந்தடைந்தார்.


அவரை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்ற புத்தளம் மக்கள் கொழும்பு முகத்திடலில் ஒன்று கூடி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 


தொடர்ந்து பாலாவியில் முன்னாள் வடமேல் மாகாண சபையின் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட் உறுப்பினருமான எஸ். எச்.எம் நியாஸ் சாதனை வீரன் சஹ்மி ஸஹீடை வரவேற்று வழியனுப்பியமை குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال