JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் ( துஆ ) புத்தளம் தொகுதியின் பிரதான அமைப்பாளராக றபாத் அமீன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ, புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஐக்கிய தேசிய கட்சியின்  வலய அமைப்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டாரவின் முஸ்லிம் விவாகரங்களுக்கான செயலாளருமான றபாத் அமீன் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விடை பெற்று வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமடின் கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணியில் (துஆ ) இணைந்து கொள்ள உள்ளதுடன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாணத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பாக போட்டியிட உள்ளதாக றபாத் அமீன் தெரிவித்தார்.


இவர் கடந்த வாரம் வடமேல் மாகாண ஆளுநரின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال