JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்வுகள்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,  கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கலைக் கலாசார விழுமியங்களை மேன்மைப்படுத்தும் முகமாக இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் களிகம்பு அடித்து இஸ்லாமிய கீதம், ரபான் அடித்து இஸ்லாமிய கீதம், இஸ்லாமிய கீதங்கள், முஹர்ரம் மாதத்தின் சிறப்புக் கவிதை, ஓரங்க நாடகம், பிள்ளைகள் வளர்பதற்கான வழிகாட்டல், கெளரவிப்பு நிகழ்வு மற்றும் பட்டிமன்றம் ஆகியன இடம்பெறவுள்ளன.


இந்நிகழ்வுகள் யாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.


இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும். பெண்களுக்கு தனி வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஊடக பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال