JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் இரு மாணவர்கள் சதுரங்க போட்டியில் வரலாற்றுச் சாதனை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் தரம் 02 மற்றும் 03 ஐச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற 2024 ம் ஆண்டிற்கான திறந்த சதுரங்க போட்டியில் பங்குபற்றிய 36 மாணவர்களில் 27 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் மாவட்ட செம்பியனாக 07 வயதிற்குட்பட்ட பிரிவில் எம்.யூ அஹமட் மற்றும் 09 வயதிற்குட்பட்ட பிரிவில் எம்.ஐ உமைர் ஆகிய இருவரும் தெரிவாகி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்கள் என பாடசாலையின் அதிபர் எம்.எம் ஹுதைபா தெரிவித்துள்ளார்.


இவர்களின் இவ் வரலாற்று சாதனைக்கு இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் அப்ரீத் அவருக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட ஆசிரியர் சுக்ரி மற்றும் பாடசாலையின் உப அதிபர் ஏ ஆர்.எம் புவாஸ் ஆகியோருக்கும் வெற்றி பெற்ற மாணவர்கள் அணைவருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக அதிபர் எம்.எம் ஹுதைபா  தெரிவித்துள்ளார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال