JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு!.

பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இன்று 08.07.2024  விளையாட்டு வீரர்களை  கௌரவிக்கும் நிகழ்வு   அதிபர் திருமதி. பர்ஜானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

  

இந்நிகழ்வு  உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 14 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பணப்பரிசினை தூய தேசத்திற்கான இயக்கம் (Clean Nation) வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதில் பிரதம அதிதியாக தூய தேசத்திற்கான இயக்கத்தின் உயர்நிலை உறுப்பினரான ஸாதிர் அவர்கள், தூய தேசத்திற்கான இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளருமான  செப்f ஜவாத் அவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினரான அஷ்ஷெய்க்  மௌலவி ஏ. எம். அப்துல் மலிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال