JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்று பல தடவைகள் மழை; பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்     


அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.


மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


கொழும்பு - அடிக்கடி மழைபெய்யும்.


காலி - அடிக்கடி மழைபெய்யும்.


யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.


கண்டி - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்.


நுவரெலியா- அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.


இரத்தினபுரி - அடிக்கடி மழைபெய்யும்.


திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை.


மன்னார் - பிரதானமாக சீரான வானிலை.


வளி மண்டலவியல் திணைக்களம்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال