JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி திகழி அல் மதீனா பாடசாலைக்கு 15 மில்லியன் நிதி பெற்றுக் கொடுத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி திகழி அல் மதீனா பாடசாலைக்கு முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி எம் தாஹிர் பதவியில் இருந்த காலப் பகுதியில் வடமேல் மாகாண சபை ஊடாக பெற்றுக் கொடுத்த இரு மாடிக் கட்டிடத்தின் கீழ் பகுதி  கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 2017 ம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டது எனினும் மேல் தள கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 


தற்போது மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்குரிய வகுப்பறைகள் குறைபாடாக காணப்பட்டதனால்  கட்டிடத்தின் மேல்மாடிக்கான தேவைப் பாட்டை கருத்தில் கொண்டு முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக தற்போது வடமேல் மாகாண சபையில் இருந்து சுமார் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இன்று வியாழக்கிழமை (13) கற்பிட்டி திகழி அல் மதீனா பாடசாலைக்கு அதிகாரிகள் சகிதம் விஜயம் செய்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம் தாஹிர் கட்டிடத்தினைப் பார்வை இட்டதோடு துரிதமாக வேலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.


இந் நிகழ்வில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சிபான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال