JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸாவின் அதிபர் முஸ்தபா அன்சாருக்கு பிரியாவிடை

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கடமையாற்றிய  அதிபர்  முஸ்தபா அன்சர்  (SLPS) இன்று (26) முதல் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். அவரை பாடசாலை நிர்வாகம் சார்பாக கௌரவித்து வழியனுப்பும் பிரியாவிடை நிகழ்வு நேற்று (25) பாடசாலையில் இடம்பெற்றது.


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய நஸ்ரின் பிரதி அதிபரிடம் தனது பொறுப்புகளை நேற்று உத்நியோக பூர்வமாக ஒப்படைத்த  அதிபர் முஸ்தபா அன்சார் பாடசாலையின் ஆசிரியர் சமூகத்திடம் இருந்து விடைபெற்று சென்றதுடன் பாடசாலையின் ஆசிரியர் சார்பாக அவருக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال