JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸ்போட்ஸ் அமைப்பின் நீச்சல் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ்)

புத்தளம் ஸ்போர்ட்ஸ் மைன்ட் அமைப்பினால் "நேட்சர் விளையாட்டு கழகம்" நிறுவுனர் ஹிசாம் கான் நடாத்தும் சிறுவர்களுக்கான நீச்சல் போட்டி நிகழ்ச்சிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது.


நேட்சர் விளையாட்டு கழகம் சார்பாக எம்.எச். முஹம்மத் இதனை தலைமை தாங்கி நடாத்தி வைத்தார்.


புத்தளத்தில் நீச்சல் தடாக பயிற்சியில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் வெற்றிகள் தேசிய, சர்வதேச மட்டங்களில் ஏற்பட வேண்டும் என்பது ஏற்பாட்டு குழுவினரின் எதிர்பார்ப்பாகும்.


இதனை ஊக்குவிக்கும் பொருட்டே நீச்சல் பயிற்சி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال