JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி - கனமூலை மந்தமான் தீவு ஊடான குடிநீர் திட்டம் அங்குரார்ப்பணம்

(கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் புத்தளம் ஒம்.யூ.எம் சனூன்)

கனமூலை பர்ஷானா எக்ஸ்போட் உரிமையாளர் என்.எம்.எம். சித்தீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸின் முயற்சியினால் காலஞ்சென்ற முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டில் கனமூலை மந்தமான்தீவு ஊடாக சித்தீக் எக்கடமி வரை குடிநீர் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண  நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் சமரீ பெரேரா கலந்து கொண்டு  மேற்படி குடிநீர் வேலைத்திட்டதை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பொது ஜன பெரமுன முன்னணியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ், சித்தீக் அகடமியின் பணிப்பாளர் என்.எம்.எம். சித்தீக் மற்றும் அரசியல் பிரமுவர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال