JobVibe.lk - Sri Lanka Job Portal

பூலாச்சேனை பாடசாலைக்கான ஸ்மார்ட் வகுப்பரை, உள்ளக வீதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் 2024ஆம் ஆண்டுக்கான  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உள்ளக இன்டர்லொக் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (24) பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


பாடசாலை அதிபர் எச்.ஏ. முஹுதார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லினை  நாட்டிவைத்தார்.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் நுரைச்சோலை அமைப்பளார் என்.எம். ஹஸீப், பிரத்தியேக செயலாளர் ஜவ்சி ஜமால்தீன் மற்றும் இணைப்பாளர் எச். அமீர் அலி ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்த திட்டங்களுக்காக பூலாச்சேனை பாடசாலைக்கு ரூபா 2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال