JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்புடன் புனரமைக்கப்பட வேண்டும் - பேராளர் மாநாட்டில் கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளர் முஸம்மில்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 வது பேராளர் மாநாட்டில் கட்சியின் கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான ஏ ஆர் எம் முஸம்மில்  புத்தளம் மாவட்ட கட்சிப் புனரமைப்பு சம்பந்தமாக ஆற்றிய உரை.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்பாடுகள் மர்ஹூம் கே.எ. பாயிஸிற்குப் பிறகு புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக  செயற்பாடுகள் சற்று சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் கட்சியை மீள் புனரமைப்பு செய்வதுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்துகளை கொடுத்து கட்சிக்கான ஓர் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தி தருமாறு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வதாகவும்


அத்தோடு  புத்தளம் மாவட்டத்தில் கட்சியின் புனரமைப்பு  சிறந்த திட்டமிடல் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் கட்சியின்  உயர்பீட உறுப்பினர்களாக பொறுப்புக்களை வைத்திருப்பவர்கள் தமக்கு கிடைக்கப் பெற்ற பதவியை சகல பிரதேசங்களுக்கும் சமமான பணிகளை செய்யுமாறும்,  இன்னும் புத்தளத்தில் நீண்ட காலமாக கட்சியின் போராளியாகவும், உயர்பீட உறுப்பினராகவும் பல தியாகங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களை  கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال