JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

கற்றல் உபகரண தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (24) நுரைச்சோலை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமமின் எண்ணத்தில் உதயமான "அறிவால் உலகை ஆள்வோம் 

அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு”

என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட புத்தளம் பீ.சீ.எம்.எச். நிதியத்தின் பங்களிப்புடன் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இதேவேளை பாடசாலையின் ஆரம்ப பிரிவின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாத்தியக்கருவிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வும் சமகாலத்தில் நடைபெற்றன. 


பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டார்.


இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகளை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்படன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال