JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வலய மட்ட சதுரங்க போட்டியில் கனமுல்லை ஹிதாயா கல்வி நிலையத்தின் 04 பேர் வெற்றி

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற 2024 ம் ஆண்டிற்கான சதுரங்க போட்டியில் கனமுல்லை ஹிதாயா கல்வி நிலையத்தின் நான்கு மாணவர்கள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


கனமுல்லை ஹிதாயா கல்வி நிலையத்தின் மாணவர்கள் சகல துறைகளிலும் சாதித்து முன்னேற்ற கரமான பாதையில் பயணித்து வருகின்றனர்  அதன் அடிப்படையில் புத்தளம் ஆனந்தா கல்லூரியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இடம்பெற்ற சதுரங்க போட்டியில் 01) எம்.ஐ.எப் இப்ரா, 02) எம்.டி. தக்கி உஸ்மான், 03) ஈ. சுஹா மஷாஹில், 04) எம்.என்.எப் நுஹா  ஆகிய நான்கு மாணவர்களும் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டல்கள் பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் அப்ரித்க்கு ஹிதாயத் கல்வி நிலையத்தின் நிர்வாகம் சார்பாக தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال