JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற ஆர்பாட்டம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்கள்  மேற்கொண்ட ஆர்பாட்ட பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டு வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள்  தமது கோரிக்கைகளை முன்வைக்கும் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாத்தல், பெற்றோர்களின் கல்விக்கான பொருளாதார சுமையைக் குறைத்தல், இலவச கல்வியை தனியார் மயமாக்கல் உங்களுக்கு எதிர்பை தெரிவித்தல், அதிபர், ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர்களின் நிலுவைச் சம்பளம் என்பவைகளின் கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال