JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சென் மேரிஸ் பாடசாலைக்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு  வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் அருட்சகோதரி எஸ். ஜெனட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக்குழு அதிகாரியும், சமூக ஆர்வலருமான முஜாஹித் நிஸார், பிரதேச இணைப்பாளரும், சமூக சேவையாளருமான முஹம்மது சபீர், பாடசாலை உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். 


குறித்த தண்ணீர் தாங்கியினை பெற்றுக்கொடுக்க சமூக ஆர்வலர் முஜாஹித் நிசார் ஏற்பாடு செய்திருந்தார்.


மேலும் இந்த பாடசாலையில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட தற்காலிக வகுப்பறையை புனர் நிர்மாணம் செய்வதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال