JobVibe.lk - Sri Lanka Job Portal

பொஸன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

பொஸன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு புத்தளம் குருநாகல் வீதி சிங்கித்தி முன்பள்ளி பாடசாலை ஏற்பாடு செய்த பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு (20) புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்றது.


முன்பள்ளி பொறுப்பாசிரியை அமிதா எதிரிசிங்க மற்றும் உதவி ஆசிரியைகள் இணைந்து இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தனர்.


இதன் போது முன்பள்ளியில் கல்வி பயிலும் 52 மாணவர்களினால் பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் புத்தளம் சிறீ விசுத்தாராம விகாரையின் விகாராதிபதி மஹகம சுதஸ்ஸி ஹிமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال