(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான முக்கிய மூன்று நிகழ்ச்சிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (28) வெள்ளிக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
“மாற்றத்திற்கான புதிய வருடம்” என்ற தொனிப்பொருளில் பல அபிவிருத்தி இலக்குகளை குறுகிய காலத்தில் அடையும் நோக்கில் அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கானினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் ஒரு அம்சமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களை பாடவிதானம் மற்றும் இணைப்பாடவிதானம் ஆகிய செயற்பாடுகளில் உட்சாகமூட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதனடிப்படையில் உயர்தர வர்த்தக பிரிவின் aat கற்கையின் 2வது படிநிலையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கு நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலய Commerce Wing அனுசரனை வழங்கி இருந்தது.
இவ்வாண்டிற்கான பாடசாலை மட்ட தமிழ் மொழித்தின போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களும் பாடசாலையின் ‘தமிழ் இலக்கிய மன்றத்தின்’ ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டதோடு,
பாடசாலை English Literary அமைப்பின் ஏற்பாட்டில், பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கில தின போட்டிகளின் சான்றிதழ்களும் சம காலத்தில் வழங்கிவைக்கப்பட்டன.
இப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் கோட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பிரதான இடங்களை பெற்றுக்கொள்ள பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.
