JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் பஸ் சேவை விரைவில்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம் யூ.எம் சனூன்)

புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னார் பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் மிக நீண்ட நாட்களாக  முன்வைக்கப்பட்டு வந்தது இது விடயம் சம்மந்தமாக பல்வேறு மட்டங்களிலும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் ஆகியோர் பேச்சு வார்த்தைகளை மேற்க் கொண்டதன் பயனாக மேற்படி புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் பஸ் சேவைக்கான முதற் கட்ட அனுமதி இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதி கிடைத்துள்ளது 


முயற்சியினால் புத்தளம் முதல் மரிச்சிக்கட்டி(கலாஓயா பாலம்)வரை மற்றும்  மரிச்சிக் கட்டி(கலாஓயா பாலம்)முதல் மன்னார் வரையான  பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.


இதன்படி புத்தளம் எழுவன்குளம் ஊடாக புத்தளத்தில் இருந்து மரிச்சிக்கட்டி வரையான பஸ் சேவைக்கு முதற்கட்ட போக்குவரத்து சபையின் அனுமதி கிடைத்துள்ளது. எனினும் மன்னார் முதல்  மடிச்சிக்கட்டி வரைக்குமான பஸ் சேவைக்கு  போக்குவரத்து சபையின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். என தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال