JobVibe.lk - Sri Lanka Job Portal

ரத்மல்யாய அரபா மஸ்ஜிதுக்கு வுழு செய்வதற்கான டெப் வசதிகள் அமைத்துக் கொடுத்த முஜாஹித் நிசார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் ரத்மல்யாய அரபா மஸ்ஜிதுக்கான வுழு செய்வதற்கான சம்பூர்ணமான டெப் வசதிகளை  முழுயாக ஏற்படுத்திக் கொடுத்தார் முஸ்லிம் செரன்டிப் நிதியத்தின் பணிப்பாளரும் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை அதிகாரியும் , சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார்.


முழுமையாக அமைக்கப்பட்ட நீர் தாங்கி, தண்ணீர் மோட்டர் மற்றும் வுழு செய்வதற்கான டெப் வசதிகள். என்பனவை கடந்த சனிக்கிழமை (15) அரபா மஸ்ஜித் பேஷ் இமாம் மௌலவி மபாஸ் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் முஸ்லிம் செரன்டிப் நிதியத்தின் பணிப்பாளரும் ,நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை அதிகாரியும், சமூக ஆர்வலருமான முஜாஹித் நிஸார் , பிரதேச இணைப்பாளரும், சமூக சேவையாளருமான உவைஸ் , புத்தளம் முன்னால் உப நகர பிதா ஏ.ஓ அலிகான் , பள்ளி நிர்வாகிகள், என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال