ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் மரண விசாரணை அதிகாரி ஹிஸாம் JP அவர்களின் அன்புத் தாய் ஹதீஜா உம்மா அவர்கள் காலமானார்.
புத்தளம் காலஞ்சென்ற செய்யது முஹம்மது, ரஹ்மத்து பீவி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற J.P. பதுர்தீன் அவர்களின் அன்பு மனைவி ஹதீஜா உம்மா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் J.P. ஹிஸாம் (மரண விசாரணை அதிகாரி - புத்தளம்), இல்ஸாம் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெஸீமா, ஹலீமா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற இப்றாஹீம், உம்மு ரஸீனா, மற்றும் முஸ்தபா, நூருதீன், ஹபீபா, நாகூர் உம்மா, மர்ஜான் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (15) அஸர் தொழுகையுடன் மகன் JP ஹிஸாம் அவர்களின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
தகவல் - மகன்
JP ஹிஸாம்
(மரண விசாரணை அதிகாரி)
No comments