JobVibe.lk - Sri Lanka Job Portal

வை .எம்.எம்.ஏ யின் கற்பிட்டி கிளை நிர்வாகிகள் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடையிலான கலந்துரையாடல் \

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ. எஸ் - எதிரிசிங்கவின அழைப்பின் பேரில் வை.எம்.எம் ஏ கற்பிட்டி கிளையின் தலைவர் ஏ எச்.எம்.எம் ஷாபி மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) இரவு கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோக காரியாலயத்தில் இடம்பெற்றது.


இக் கலந்துரையாடலின் போது கற்பிட்டி பிரதேச இளைஞர்களின் தற்காலப் போக்கு, பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஒழுக்க சீர்கேடுகள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் இன்னும் ஓரிரு வாரங்களில் சகல அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்து  பாரியதொரு கலந்துரையாடலுக்கு  ஏற்பாடு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


இதில் வை எம்.எம்.ஏ யின் கற்பிட்டி கிளையின் நிர்வாக உறுப்பினர்களான எம்.என்.எம் சிப்ராஸ், எம்.ஏ.எம் ஆதிப்ஷான், ஏ.எச் முஷாரப் அஹமட்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال