JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று (22) பாடாசாலையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ழார் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதியாக புத்தளம் - தெற்கு கோடக்கல்விப் பிரிவு இஸ்லாம் பாட  ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க் எஸ்.எச். அப்துர் ரயீஸ் கலந்து கொண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வித்தியாரம்பம் செய்து வைத்தார்.


இதன் போது தரம் இரண்டு மாணவர்களால் தரம் ஒன்று மாணவர்கள் மாலை அணிவித்து மலர்ச்செண்டு  வழங்கி பாடசாலைக்கு வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال