JobVibe.lk - Sri Lanka Job Portal

பாடசாலைக்கு பழைய மாணவர்களால் மின்விசிறி அன்பளிப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ள பிரதான மண்டபத்திற்கு 18 மின்விசிறிகளினதும் மற்றும் 250 பிளாஸ்டிக் கதிரைகளினதும் தேவைப்பாடு காணப்படுகின்றது. 


நிலையில் முதற் கட்டமாக பாடசாலையின் 98 உயர்தர வகுப்பு  பழைய மாணவர்கள் குழுவினால் இரண்டு மின்விசிறிகள் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு அதிபர் அலுவலகத்தில் 98 உயர்தர பழைய மாணவர்களால் அதிபர் எம்.ஐ.எம் ஏ றஸ்ஸாக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. . பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்களின் பங்கு இன்றியமையாதது .இவ்வாறான முன் உதாரண செயற்பாடுகளை அதிபர் என்ற ரீதியில் தான்  வரவேற்பதாகவும், பாடசாலை சார்பாக தமது  நன்றிகளையும் பழைய மாணவர்களுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال