JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட மட்டத்தில் 479 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி

(கற்பிட்டி - எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்டத்தில் உள்ள 20 தமிழ் மொழி பாடசாலைகளில் இருந்து 727 மாணவர்கள் இம் முறை சாதாரண தரப் பரீட்சையிக்கு தோற்றியுள்ளதுடன் இதில்  479 மாணவர்கள் உயர்தரம் (5/3) கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் இது 65.88% சதவீத சித்தியாகும் என புத்தளம் வலய பணிமனையின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


இதிலும் 9 ஏ சித்திகளை நான்கு பாடசாலைகளிலும் மொத்தமாக 09 மாணவர்கள் பெற்றுள்ளனர்.


இதன்படி 9 ஏ சித்திகளை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 05 மாணவர்களும் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் பள்ளிவாசத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் என பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال