JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய 09 பேர் கைது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டியிலிருந்து கணடக்குளி கடற்கரையை நோக்கி தேத்தாவாடி ஊடாக செல்லும் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டப்படுவதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த விடுதியை சுற்றிவளைத்து அங்கு இருந்த 09 பேர் கைது செய்து செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளடங்களாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட இரும்பு பொருட்களும் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட இன்னும் சில பொருட்களும் இதன் போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்வர்கள் கற்பிட்டி மற்றும் தும்மலசூரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال