JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் மாபெரும் மார்க்க ஒன்று கூடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் தஃவா குழு ஏற்பாடு செய்துள்ள "மாபெரும் மார்க்க ஒன்று கூடல்" நாளை வெள்ளிக்கிழமை (26) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது. 


"குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய வழிகாட்டலும்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.சி. தஸ்தீக் (ஹாமி, மதனி) மற்றும் "இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிரான இன்றைய அனாச்சாரம்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எஸ்.எல். நிக்ராஸ் (தவ்ஹீதி) ஆகியோர் நிகழ்வில் விசேட சொற்பொழிவாற்றவுள்ளனர்.


இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில், பெண்களுக்காகவும் விசேடமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஆண்களும் பெண்களும் என இருபாலாரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال