JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐந்நூறு(500) மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்டம் முன்னெடுப்பு

 பாறுக் ஷிஹான்

சமூகங்களுக்கு மத்தியில் இன நல்லுறவை மேம்படுத்தும் வித்தியாலயத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) அனுசரணையுடன் இன்று கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


இதன் போது  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட  பயனாளிகள் நன்மை அடையும் விதத்தில் ஐந்நூறு மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்டம்  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான  இணைப்பாளருமான ஏ.ஜி.எம் றிஷாதின்  தலைமையில் நடைபெற்றது.  


இந்நிகழ்வில்   மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.நிஹார் , மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அன்ஸார் மௌலானா ,கல்முனை சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பரீரா, கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம். புவிராஜ், விவசாயப்போதனாசிரியர் பி. திருத்திக்கா,  ஆசிரியர் டி.கே.எம்.  மௌசீன் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.அர்சுதீன் , சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கத் தலைவர் எஸ்.காலித், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال